சுவிட்சர்லாந்தின் சர்ச்சைக்குரிய புர்கா தடை மற்றும் குழந்தை திருமணங்களை எதிர்த்துப் போராடுவதற்கான புதிய சட்டங்கள் அனைத்தும் 2025 ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வந்துள்ளன.
புர்கா தடை என்று பரவலாக அறியப்படும், பொது இடங்களில் முகத்தை மூடுவதற்கான தடை நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
இந்த தடையை மீறினால் 1,000 பிராங் வரை அபராதம் விதிக்கப்படும்.
அண்டை நாடுகளான பிரான்ஸ் மற்றும் ஒஸ்ரியா உட்பட ஐந்து ஐரோப்பிய நாடுகளுடன், சுவிட்சர்லாந்து இந்த தடையை விதித்துள்ளது.
புர்கா எதிர்ப்பு முயற்சிக்கு 51.2% சுவிஸ் வாக்காளர்கள் 2021 மார்ச்சில் ஒப்புதல் அளித்துள்ளனர்.
மூலம்- swissinfo