சுவிஸ் அரசாங்க ஓய்வூதியங்கள் இந்த மாதம் தொடக்கம், 2.9% அதிகரிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய விலைவாசி அதிகரிப்புகளுக்கு ஏற்ப ஓய்வூதியம் உயர்த்தப்பட்டுள்ளது.
அதன்படி, குறைந்தபட்ச அரசாங்க ஓய்வூதியம் 1,225 பிராங்கில் இருந்து1,260 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதிகபட்ச ஓய்வூதியம் 2,450 பிராங்கில் இருந்து 2,520 பிராங்குகளாக உயர்த்தப்பட்டுள்ளது.
வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ப ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கும் ஓய்வூதியம் சரிசெய்தல் தேவையா என்பதை அரசாங்கம் பொதுவாக ஆராய்கிறது.
ஓய்வூதியங்கள் கடைசியாக 2023 இல் அதிகரிக்கப்பட்டன.
மூலம்- swissinfo