Lindor சொக்லட் உருண்டைகளின் வர்த்தக முத்திரை உரிமை தொடர்பான வழக்கில், Lindt & Sprüngli, நிறுவனம் வெற்றி பெற்றுள்ளது.
வர்த்தக உரிமையை மீறியதாக சில்லறை விற்பனையாளரான Aldi Suisse மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
வழக்கின் தீர்ப்பை அடுத்து, Aldi Suisse தனது சொந்த சொக்லட் உருண்டைகளின் விற்பனையை நிறுத்த வேண்டும்.
German discounterஇன் சுவிஸ் கிளையான Aldi Suisse நிறுவனத்தினால் விற்கப்படும் ” Moser Roth ” சொக்லட் உருண்டைகள் தமது, Lindor சொக்லட் உருண்டைகளுடன், தேவையில்லாமல் ஒத்திருப்பதாக, Lindt & Sprüngli யின் வாதத்தை Aargau வர்த்தக நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது.
சுவிட்சர்லாந்தில் ஆண்டுக்கு 44.8 மில்லியன் பிராங் Lindor உருண்டைகள், விற்பனையாகின்றன.
மூலம்- swissinfo