2 C
New York
Monday, December 29, 2025

சுவிசில் தீவிரமாக பரவும் குளிர்கால வைரஸ்கள்.

சுவிட்சர்லாந்தில் காய்ச்சல், இருமல் மற்றும் சளி போன்ற  தொற்றுநோய்கள் வேகமாக பரவி வருகின்றன.

ஏராளமான குளிர்கால  வைரஸ்கள் பரவி வருவதால், மருந்தகங்கள் மற்றும் மருத்துவரைச் சந்திக்கும் இடங்களில் நோயாளிகள் நிரம்பியுள்ளனர்.

காய்ச்சல் மற்றும் இருமல் தவிர, பலர் மூட்டு வலி, தொண்டை கரகரப்பு அல்லது மூக்கு அடைப்பு  போன்ற அறிகுறிகள் இருப்பதாக நோயாளிகள் தெரிவித்துள்ளனர்.

சமஷ்டி சுகாதார பணியகத்தின் அறிக்கையின்படி, காய்ச்சல் பாதிப்பு சில வாரங்களாக அதிகரித்து வருகின்றது.

டிசம்பர் நடுப்பகுதியில் 100,000 பேருக்கு ஐந்து என பதிவு செய்யப்பட்டிருந்தாலும், ஆண்டின் கடைசி வாரத்தில் இது 12 ஆக அதிகரித்துள்ளது.

இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

காய்ச்சல் தொற்றுநோய் ஜனவரி இறுதியில் உச்சத்தை எட்டும் என்று நிபுணர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

காய்ச்சலுடன் மற்ற வைரஸ்களும் பரவுகின்றன.

மூலம் -bluewin

Related Articles

Latest Articles