18.2 C
New York
Thursday, September 11, 2025

மூடப்படும் Jelmoli யில் பாரிய தள்ளுபடி- குவியும் மக்கள் கூட்டம்.

சூரிச்சில் மிகப் பெரிய சில்லறை வர்த்தக நிலையமான Jelmoli  மூடப்படவுள்ள நிலையில் பாரிய தள்ளுபடி விற்பனையை ஆரம்பித்துள்ளது.

நேற்றுக்காலை  இந்த தள்ளுபடி விற்பனை தொடங்கிய பேரும் பெருமளவு மக்கள்  கூடியதால் பொருட்களை வாங்க நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

Bahnhofstrasse இல் உள்ள இந்த விற்பனை நிலையம், 70 சதவீதம் வரை தள்ளுபடியுடன் பொருட்களை விற்பனை செய்வதாக அறிவித்துள்ளது.

இதனால் நேற்று காலை 10 மணி முதல், நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்கள் வரிசையில் நின்றனர்.

126 ஆண்டுகளுக்குப் பின்னர்,  Jelmoli  வர்த்தக நிலையம், வரும் பிப்ரவரி 28 ஆம் திகதியுடன் செயற்பாட்டை நிறுத்தவுள்ளது.

அதன் மேல் தளங்கள் ஏற்கனவே அகற்றப்பட்டுவிட்டன.மூன்று தளங்களில் மட்டுமே விற்பனை நடைபெறுகிறது.

அத்துடன்,  பணம் இனி ஏற்றுக்கொள்ளப்படாது என்றும், கிரடிட்  அல்லது டெபிட் கார்ட்கள் மட்டும் ஏற்றுக் கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்- bluewin

Related Articles

Latest Articles