தனது மூன்று குழந்தைகளை கவனிக்காமல், வீட்டை விட்டு சென்று, மறுநாள் குடிபோதையில் திரும்பிய 30 வயதான பெண் ஒருவருக்கு, ஜெனிவா சட்டமா அதிபர் அலுவலகம் தண்டனை விதித்துள்ளது.
அந்தப் பெண்ணுக்கு தனது பராமரிப்பு மற்றும் வளர்ப்பு கடமைகளை மீறியதற்காக, தலா 50 பிராங்குகள் வீதம் 50 நாட்களுக்கு அபராதமாகச் செலுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
விவாகரத்து பெற்ற, வேலையில்லாத தாய், பார்ட்டிக்காக வெளியே சென்றிருந்தபோது, தன் மூன்று குழந்தைகளை வீட்டில் கவனிக்காமல் விட்டுச் சென்றுள்ளார்.
இந்த சம்பவம் 2024 ஜூன் மாதம் நடந்தது.
குறித்த ஸ்பானியப் பெண் மாலையில் தனது வீட்டை விட்டு வெளியேறினார். அப்போதுது, ஒரு மணி நேரத்திற்குள் திரும்பி வருவேன் என்று தனது 13 வயது மகளுக்கு உறுதியளித்தார்.
அடுத்த நாள் வரை அவர் தனது மகளின் அழைப்புக்குப் பதிலளிக்கவில்லை.
இந்த நேரத்தில், 13 வயதான சிறுமி தனது சகோதரர் (8) மற்றும் அவரது ஏழு மாத சகோதரியை தானே கவனித்துக் கொள்ள வேண்டியிருந்தது.
கடைசியாக சிறுமி தாயை வீட்டிற்கு வரச் சொன்ன போது, பொழுது போக்கிற்கு தனக்கும் உரிமை உண்டு என்று பதிலளித்ததாக கூறப்படுகிறது.
தாய் அப்போது தோழியின் வீட்டில் குடிபோதையில் இருந்தார்.
இரவு 8 மணியளவில், வீட்டை விட்டு வெளியேறி கிட்டத்தட்ட 24 மணி நேரத்திற்குப் பிறகு, அவர் இறுதியாக வீடு திரும்பினார்.
ஆசிரியர் ஒருவரிடம் மகள் இதனைக் கூறியதால் இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.
ஆசிரியர் பாடசாலை நிர்வாகத்தின் ஊடாக இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு சேவைக்கு அறிவிக்கப்பட்டது.
மூலம்- bluewin