2024ல் சுவிட்சர்லாந்தில் புதிய கார்கள் விற்பனை குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளது.
கடந்த ஆண்டு சுவிட்சர்லாந்து மற்றும் லிச்சென்ஸ்டைன் மாகாணத்தில் 2,39,500 புதிய கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக சுவிஸ் ஓட்டோமொபைல் இறக்குமதியாளர்கள் சங்கம் நேற்று அறிவித்துள்ளது.
இது முந்தைய ஆண்டை விட 5% குறைவாகும்.
கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு முன்னர், புதிய கார்களின் பதிவுகளின் எண்ணிக்கை சுமார் 300,000 ஆக இருந்தது.
முழு மற்றும் இலேசான கலப்பின கார்களின் விற்பனை 17% அதிகரித்துள்ளது.
அதேவேளை, மின்சார கார்கள் (-12.5%) மற்றும் பிளக்-இன் கலப்பினங்கள் ( -10.4%) போன்றவற்றின் விற்பனை கணிசமாகக் குறைந்துள்ளது.
மூலம்- swissinfo