16.6 C
New York
Thursday, September 11, 2025

சூரிச் விமான நிலையம் ஊடான விமானப் போக்குவரத்து 6.2% அதிகரிப்பு.

சூரிச் விமான நிலையத்தின் ஊடாக விமானப்  போக்குவரத்து, 2024 இல் மேலும் அதிகரித்துள்ளது. 2023ஆம்  ஆண்டை விட விமானப் போக்குவரத்து 6.2% அதிகரித்துள்ளது.

எனினும், கொரோனா வைரஸ் தொற்று வெடிப்பதற்கு முன்னர் 2019 ஆண்டின் விமானப் போக்குவரத்தை இன்னமும் எட்டவில்லை.

மொத்தம் 255,956 விமானங்கள் கடந்த ஆண்டு சூரிச்சில் புறப்பட்டு, தரையிறங்கியுள்ளன.

2019 இல், இந்த எண்ணிக்கை 268,968 விமானங்களாக இருந்தது.இந்த வேறுபாடு இப்போது 5% க்கும் குறைவாக உள்ளது.

2024 இலையுதிர் கால விடுமுறை நாட்களில் அதிக விமானப் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.

ஒக்டோபர் 11, ஆம் திகதி வெள்ளிக்கிழமை, மொத்தம் 840 விமானங்கள் சூரிச்சிற்கு இயக்கப்பட்டன.

எனினும் மாத அடிப்படையில் கோடை விடுமுறை காரணமாக ஜூலை மாதம் முதலிடத்தில் உள்ளது – இந்த மாதத்தில், மொத்தம் 24,221 விமானங்கள் இயக்கப்பட்டன. இது முந்தைய ஆண்டை விட 5% அதிகம்.

செப்ரெம்பரில் 11.2% அதிகரித்து 23,587 விமானங்கள் செயற்பட்டன.

கடந்த ஆண்டு மிகவும் அமைதியான நாள் ஜனவரி 23 ஆகும். குறித்த நாளில்  492 விமானங்கள்  மட்டும் சூரிச்சில் இருந்து புறப்பட்டன அல்லது தரையிறங்கின.

மூலம்- swissinfo

Related Articles

Latest Articles