-0.7 C
New York
Sunday, December 28, 2025

கார் விபத்தில் கர்ப்பிணிப் பெண் காயம்.

St. Gallen இல் உள்ள Langgasse இல்,  வியாழன் மாலை, 7:40 மணியளவில், இடம்பெற்ற விபத்தில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் காயம் அடைந்தார்.

19 வயது பெண் ஒருவர் செலுத்திக் கொண்டிருந்த கார், பேருந்தை முந்திச் செல்ல முற்பட்டது.

திடீரென அவர், தனக்குப் பின்னால் வந்து கொண்டிருந்த வாகனத்தைக் கவனிக்காமல், பேருந்தைப் பின்தொடர முயற்சித்தார்.

இதனால்,  பின்னால் வந்து கொண்டிருந்த காருடன் மோதியது.

இந்த விபத்தில், பின்னால் வந்து கொண்டிருந்த காரில் இருந்த கர்ப்பிணிப் பெண் ஒருவர் காயம் அடைந்தார்.

அவர் உடனடியாக  அவசர சேவைகளால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

மூலம்- 20min.

Related Articles

Latest Articles