2024 ஆம் ஆண்டில், உலகின் முதல் 100 மதிப்புமிக்க நிறுவனங்களுக்குள் மூன்று சுவிஸ் நிறுவனங்கள் மீண்டும் இடம்பிடித்துள்ளன.
ரோச், நெஸ்லே மற்றும் நோவார்டிஸ் ஆகிய சுவிஸ் நிறுவனங்கள், தரவரிசையில் சரிவைச் சந்தித்துள்ளன.
100 மிகப் பெறுமதியான நிறுவனங்களின் மொத்த மதிப்பு 44.9 டிரில்லியன் டொலர்களாகும். இது முந்தைய ஆண்டை விட 25% அதிகம்.
தரவரிசையில் 43 வது இடத்தில் இருந்த ரோச் இப்போது 46 வது இடத்தைப் பிடித்துள்ளது.
அதே நேரத்தில் கடந்த ஆண்டு 27 வது இடத்தில் இருந்த நெஸ்லே இப்போது 51 வது இடத்தில் உள்ளது.
53வது இடத்தில் இருந்த நோவார்டிஸ் இந்தமுறை 66வது இடத்தில் உள்ளது.
மேலும் முதல் 500 இடங்களுக்குள், 15 சுவிஸ் நிறுவனங்கள் இடம்பிடித்துள்ளன.
அவற்றில், ABB (165 வது இடம்), UBS (169 வது இடம்), Richemont (185 வது இடம்), ஹோல்சிம் (351 வது இடம்) மற்றும் சுவிஸ் ரீ (463 வது இடம்) முக்கியமானவையாகும்.
இந்த தரவரிசையில் அமெரிக்காவின் ஆதிக்கமே அதிகமாக உள்ளது.
100 மிகப் பெறுமதியான நிறுவனங்களில் மொத்தம் 62 நிறுவனங்கள் அமெரிக்காவைச் சேர்ந்தவை.
எந்த ஐரோப்பிய நிறுவனமும் முதல் 10 இடங்களுக்குள் வரவில்லை.
முதல் பத்து நிறுவனங்களில் சவுதி அராம்கோ மட்டுமே அமெரிக்காவுக்கு வெளியே உள்ளது.
மூலம்- swissinfo

