சுவிட்சர்லாந்தில் ஆபத்தான உறைபனி மழை குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று இரவு முதல் ஞாயிறு வரை உறைபனி மழை குறிப்பிடத்தக்க ஆபத்தை ஏற்படுத்தும்.
எனவே தாழ்வான பகுதிகளில் எச்சரிக்கை நிலை 3 அமுலில் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆபத்தான நிலைமைகள் இரவு 9 மணிக்கும், காலை 6 மணிக்கும் இடையில் எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே மக்கள் தேவையற்ற கார் பயணங்களை தவிர்க்குமாறு Meteo Switzerland அறிவுறுத்துகிறது.
உறைபனி மழை என்பது மிகவும் அரிதான வானிலை நிகழ்வு ஆகும்.
இது குளிர்ந்த தரை மேற்பரப்பில் மழை பெய்தவுடன் பனியாக உறைந்துவிடும்.
இந்த வானிலை நிலைமை தெருக்களையும் நடைபாதைகளையும் ஆபத்தான பனிக்கட்டிகளாக மாற்றும்.
மூலம் – 20min