பாசல் நகரத்தில் சனிக்கிழமை மதியம் மின்சாரத் தடை ஏற்பட்டது. இதனால் ட்ராம் போக்குவரத்து பல மணி நேரம் முடங்கியது.
பல ட்ராம் பாதைகள் செயல்படவில்லை என பாசல் பொதுப் போக்குவரத்து நிறுவனம் (BVB) தெரிவித்துள்ளது.
மின்தடையினால் 3, 6, 8, 10, 11, 14, 15, 16 மற்றும் 17 ஆகிய லைன்களில் ட்ராம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பாசல் நகரில் பரவலான மின்வெட்டு எதுவும் இல்லை. பாசல் பொது போக்குவரத்து நிறுவனத்தின் மின் இணைப்பு மட்டும் பாதிக்கப்பட்டது என பாசல் கன்டோனல் பொலிசார் தெரிவித்தனர்.
மூலம்- 20min.