3 C
New York
Monday, December 29, 2025

பாதுகாப்பு வேலியை உயர்த்துகிறது சீன தூதரகம்.

பெர்னில் உள்ள சீன தூதரகத்தின் பாதுகாப்பு வேலியை மேலும் உயர்த்துவதற்கு அனுமதி கோரப்பட்டுள்ளது.

பெர்னில் உள்ள சீன தூதரகத்தின் பாதுகாப்பு வேலி தற்போது இரண்டரை மீட்டர் அளவில் உள்ளது. இது மேலும் சுமார் 70 சென்டிமீட்டர் உயர்த்தப்பட உள்ளது.

சீனத் தூதரகத்தின் கோரிக்கை ஏற்கப்படுமா என்பது குறித்து ஜனவரி நடுப்பகுதியில் முடிவு எடுக்கப்படும்.

பாதுகாப்பு தேவைகளை பூர்த்தி செய்வதற்காக வேலி உயர்த்தப்பட உள்ளதாக சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

சீன தூதரகம் கடுமையான கண்காணிப்பில் உள்ளது.

இரண்டு தூதரக கட்டிடங்களுக்கு இடையேயான பாதையில் பல கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

புகைப்படக் கலைஞர் ஒருவர் தூதரகத்தின் படங்களை எடுக்க விரும்பியபோது, ​​​​அவரை நிறுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார்.  பின்னர் அவரை பெர்ன் கன்டோனல் பொலிசார் அவரைத் தடுத்துள்ளனர்.

மூலம்- 20min.

Related Articles

Latest Articles