ஜேர்மனியின் பிராண்டன்பேர்க்கில் உள்ள உக்கர்மார்க் சந்திப்புக்கு அருகிலுள்ள A11 நெடுஞ்சாலையில் ஒரு மோசமான பேருந்து விபத்து இடம்பெற்றுள்ளது.
நேற்று பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர். மேலும் 11 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
13 பேருடன் பயணித்த பேருந்து பாதையை விட்டு விலகி கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
கடுமையான பனிப் பொழிவினால் வீதியின் நிலை மோசமாக இருந்ததே விபத்துக்கு காரணமாகும்.
மூலம்- bluewin