ஜிசர்ஸ் அருகே A13 நெடுஞ்சாலையின் தெற்கு நோக்கிய பாதையில் வெள்ளிக்கிழமை மாலை 5.40 மணியளவில் 8 கார்கள் விபத்தில் சிக்கியதில், 8 பேர் காயம் அடைந்தனர்.
மோதிய பெரும்பாலான கார்கள் சுர் திசையில் முந்திச் செல்லும் பாதையில் இருந்தன.
இந்த விபத்தில், ஆறு பேர் சிறிய மற்றும் மிதமான காயங்களுக்கு உள்ளாகினர்.
இருவர் ஷியர்ஸ் பிராந்திய மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
காயமடைந்த நான்கு பேர் சுரில் உள்ள கிராபுண்டன் கன்டோனல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
சம்பந்தப்பட்ட எட்டு வாகனங்களில் ஏழு வாகனங்களை இழுத்துச் செல்ல வேண்டியிருந்தது.
இதனால் நீண்ட போக்குவரத்து நெரிசல்கள் இருந்தன.
கிராபுண்டன் கன்டோனல் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மூலம்- 20 min.