19.8 C
New York
Thursday, September 11, 2025

விபத்தை அடுத்து பற்றியெரிந்த கார்கள்- ஒருவர் பலி.

பேர்னுக்கு அருகிலுள்ள முரி அருகே A6 நெடுஞ்சாலையிவல், இடம்பெற்ற விபத்தை அடுத்து, இரண்டு கார்கள் தீப்பிடித்து எரிந்தன.

இரண்டு கார்களில் ஒன்று கவிழ்ந்த நிலையில் எரிந்து கொண்டிருந்தது.

இந்த காரின் சாரதி அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இரண்டு கார்களும் முற்றாக எரிந்து போயுள்ளன.

இந்த விபத்தினால், பேர்ன்-ஓஸ்ட்ரிங் மற்றும் முரி இடையேயான வீதி,  வெள்ளிக்கிழமைஇரவு 11:50 மணிக்கு இரு திசைகளிலும் மூடப்பட்டது.

பின்னர் மணிக்கணக்கில்  போக்குவரத்து எதுவும் நடக்கவில்லை.

மூலம்- 20 min.

Related Articles

Latest Articles