ரொட் வீலர் நாய்களுக்கு சூரிச் கன்டோனில் விதிக்கப்பட்டுள்ள தடைக்கு எதிராக 13,500 பேர் கையெழுத்திட்டுள்ளனர்.
சூரிச்சில் இருவேறு சம்பவங்களில் ரொட் வீலர் நாய்களால் தாக்கப்பட்டு இரண்டு சிறுவர்கள் படுகாயம் அடைந்த நிலையில், ஜனவரி 1ஆம் திகதி முதல் ரொட் வீலர் நாய்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, சூரிச்சில் இனிமேல் ரொட் வீலர் நாய்களை வாங்கவோ, இனப் பெருக்கம் செய்யவோ, குடிபெயரவோ முடியாது.
இந்த தடைக்கு எதிராக கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கை இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டது.
இதுவரை 13, 500 பேர் இந்த தடைக்கு எதிராக கையெழுத்திட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்- 20 min.