16.1 C
New York
Friday, September 12, 2025

சுவிஸ் முழுவதும் காய்ச்சல் அலை- Jura கன்டோனில் அதிக பாதிப்பு.

டிசம்பர் மாதத்திலிருந்து சுவிட்சர்லாந்து முழுவதும் பருவகால காய்ச்சல் அலை வீசி வருகிறது.

இந்த காய்ச்சல் அலை இன்னும்  உச்சத்தை எட்டவில்லை என்று BAG (மத்திய பொது சுகாதார அலுவலகம்) புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

கடந்த வாரம், 100,000 பேரில்,  23.46  பேருக்கு காய்ச்சல் பதிவாகியுள்ளதாக பெடரல் சுகாதார  அலுவலகம் (FOPH)  தெரிவித்துள்ளது.

மேற்கு சுவிட்சர்லாந்து, Valais  மற்றும் டிசினோ குறிப்பாக அதிகளவில் இந்த காய்ச்சலினால்பாதிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக Jura கன்டோனில் அதிக எண்ணிக்கையில் இளம் குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு காய்ச்சல் பதிவாகியுள்ளன.

அங்கு 100,000 பேரில் 55  பேருக்கு காய்ச்சல் பதிவாகியுள்ளத.

Appenzell Ausserrhoden  கன்டோனில் மிகக் குறைந்த எண்ணிக்கையில் 100,000 பேரில் 7.08 பேருக்கு காய்ச்சல் பதிவாகியுள்ளது.

நான்கு வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

65 வயதுக்கு மேற்பட்ட பிரிவிலும் அதிக எண்ணிக்கையிலான வழக்குகள் உள்ளன.

15 முதல் 64 வயதுக்குட்பட்டவர்கள் குறைவாகவே பாதிக்கப்படுகின்றனர்.

மூலம்- 20min.

Related Articles

Latest Articles