19.8 C
New York
Thursday, September 11, 2025

மரத்துடன் மோதிய கார் – சிதைவுகளுக்குள் சிக்கிக் கொண்ட சாரதி.

சூரிச்சில் உள்ள Albisststrasse இல்  இடம்பெற்ற விபத்தில் சாரதி படுகாயம் அடைந்தார்.

நேற்று இரவு 9.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

மரம் ஒன்றின் மீது கார் மோதியதில் இந்த விபத்து நேரிட்டுள்ளது.

ஒரு வெடிச் சத்தம் கேட்டதாகவும் அதையடுத்து காரில் இருந்து புகை வந்ததாகவும்  நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்தார்.

கார் சாரதி வாகனத்திற்குள் சிக்கியிருந்தார்.

விரைந்து சென்ற தீயணைப்பு பிரிவினர் காயமடைந்த நிலையில் மீட்க முடியாமல் சிக்கியிருந்த சாரதியை மீட்டதுடன் கார் தீப்பற்றி எரியக் கூடிய ஆபத்தையும் தவிர்த்தனர்.

இந்த விபத்தினால் ட்ராம் மற்றும் வீதிப் போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டன.

மூலம்- 20min.

Related Articles

Latest Articles