சுவிஸ் இன்டர்நஷனல் ஏர்லைன்ஸ் பிப்ரவரி 1 ஆம் திகதி முதல் டெல் அவிவ் நகருக்கான விமான சேவைகளை மீண்டும் தொடங்கவுள்ளது.
மத்திய கிழக்கின் நிலைமையை விரிவாக ஆராய்ந்த பின்னர், சுவிஸ் விமான நிறுவனமும் அதன் தாய் நிறுவனமான லுஃப்தான்சா குழுமமும் இந்த முடிவை எடுத்துள்ளன.
அதேவேளை, விமானப் பணியாளர்கள் அங்கு இரவு தங்குவதை தவிர்க்கும் வகையில் விமானப் பயணத்தை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.
பிப்ரவரி 1 முதல், சூரிச்சிலிருந்து சுவிஸ் நிறுவனம் A320 விமானத்தை, டெல் அவிவ்வுக்கு தினமும் சேவையில் ஈடுபடுத்தும்.
அதேவேளை பெய்ரூட்டுக்கான விமானங்கள் தொடர்ந்து நிறுத்தி வைக்கப்படும்.
பிப்ரவரி முதல், சுவிஸ் மீண்டும் இஸ்ரேலிய வான்வெளியை வான்வழிப் பயணங்களுக்காகப் பயன்படுத்தும்.
மூலம்- swissinfo