Basel இல் உள்ள Bruderholzstrasse இல் வீட்டின் பல்கனியில் இருந்து விழுந்து பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று நண்பகல் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தகவல் ஒன்றை அடுத்து விரைந்து சென்ற அவசர சேவைப் பிரிவினர்,தரையில் வெள்ளை மறைப்புகளை ஏற்படுத்தினர்.
இதனால் பரபரப்பான நிலை காணப்பட்டது.
இந்த நிலையில் மாடியில் பல்கனியில் இருந்து விழுந்த பெண் படுகாயம் அடைந்தார் என்றும், காயங்களினால் அவர் மரணமானார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தில் மூன்றாவது தரப்பின் தலையீடு இருந்ததற்கான ஆதாரம் இல்லை என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மூலம்- 20min.