16.5 C
New York
Monday, September 28, 2026

மீண்டும் இஸ்ரேலுக்குப் பறக்கிறது சுவிஸ்.

சுவிஸ் இன்டர்நஷனல் ஏர்லைன்ஸ் பிப்ரவரி 1 ஆம் திகதி முதல் டெல் அவிவ் நகருக்கான விமான சேவைகளை மீண்டும் தொடங்கவுள்ளது.

மத்திய கிழக்கின் நிலைமையை விரிவாக ஆராய்ந்த பின்னர், சுவிஸ் விமான நிறுவனமும் அதன் தாய் நிறுவனமான லுஃப்தான்சா குழுமமும் இந்த முடிவை எடுத்துள்ளன.

- Advertisement -

அதேவேளை, விமானப் பணியாளர்கள் அங்கு  இரவு தங்குவதை தவிர்க்கும் வகையில்  விமானப் பயணத்தை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.

பிப்ரவரி 1 முதல், சூரிச்சிலிருந்து சுவிஸ் நிறுவனம் A320 விமானத்தை, டெல் அவிவ்வுக்கு  தினமும் சேவையில் ஈடுபடுத்தும்.

அதேவேளை பெய்ரூட்டுக்கான  விமானங்கள் தொடர்ந்து நிறுத்தி வைக்கப்படும்.

பிப்ரவரி முதல், சுவிஸ் மீண்டும் இஸ்ரேலிய வான்வெளியை வான்வழிப் பயணங்களுக்காகப் பயன்படுத்தும்.

மூலம்- swissinfo

Related Articles

Latest Articles