ஷாஃப்ஹவுசன் கன்டோன், ஜெனீவா மற்றும் சியர் நகராட்சிகளின் இணையத்தளங்களை ரஷ்ய ஹக்கர்கள் நேற்றுக் காலை முடக்கியுள்ளனர்.
DDoS தாக்குதலுக்குப் பின்னர் ஷாஃப்ஹவுசென் கன்டோனின் இணையத்தளம் மீண்டும் செயற்படுவதாக நண்பகலுக்கு சற்று முன்னர் அறிவிக்கப்பட்டது.
இந்த தாக்குதலை முற்றிலுமாகத் தடுக்க முடிந்தது. நிர்வாகத்தின் செயல்பாடுகள் ஒருபோதும் பாதிக்கப்படவில்லை என்றும் அறிவிக்கப்பட்டது.
நேற்றுக் காலையில், ஷாஃப்ஹவுசென் எரிசக்தி வழங்குநரான SH பவரின் இணையத் தளமும், ஒரு தவறான செய்தியைக் காண்பித்தது.
இருப்பினும், அதன் தளம் நண்பகலுக்கு முன்னரே, மீண்டும் வழமைக்குத் திரும்பியது.
இதற்கிடையில், சைபர் தாக்குதலுக்கு உள்ளாகிய சியர் மற்றும் ஜெனீவா நகரங்களின் இணையத் தளங்கள் அணுக முடியாததாகவே இருந்தன.
சூரிச் மற்றும் Vaud கன்டோனல் வங்கிகள் செவ்வாயன்று சைபர் தாக்குதலினால் பாதிக்கப்பட்டன.
அதே நேரத்தில் லூசெர்ன் கன்டோனின் பல நகராட்சிகளின் இணையத்தளங்களும் முந்தைய நாள் முடங்கின.
டாவோஸில் நடந்த உலகப் பொருளாதார மன்றத்தின் (WEF) மாநாட்டின் போது தேசிய சைபர் பாதுகாப்பு மையம் இந்தத் தாக்குதல்களை எதிர்பார்த்தது.
ரஷ்ய ஹேக்கர் குழுவான NoName ஆன்லைனில் தாக்குதல்களுக்குப் பொறுப்பேற்றது.
மூலம் – Swissinfo