உலகப் பொருளாதார மன்ற மாநாடு நடைபெறும் டாவோசில் நேற்று மாலை தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
மாநாடு நடைபெறும் பகுதியில் உள்ள கடை ஒன்றில் இந்த தீவிபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து அங்கிருந்து கடுமையான கரும்புகை வெளியேறியது.
உடனடியாக அங்கிருந்தவர்கள் அகற்றப்பட்டதுடன் விமானப்படையின் தீயணைப்பு பிரிவினர் விரைந்து சென்று தீயணைப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதையடுத்து புகை வெளியாவது குறைந்திருப்பதாக பிந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
மூலம் – 20min.