16.9 C
New York
Thursday, September 11, 2025

தலா ஒரு கிலோ கோகைனுடன் இரண்டு ஆண்கள் கைது.

சூரிச் விமான நிலையத்தில் தலா ஒரு கிலோ கோகைன் போதைப்பொருளுடன் இரண்டு ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த போதைப்பொருள் அழகுசாதனப் பொருட்கள் மற்றும் துணிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.

போதைப்பொருட்களை இலகுவாக கண்டுபிடிக்க முடியாத வகையில், அன்றாடப் பொருட்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.

மாட்ரிட் வழியாக சுவிட்சர்லாந்திற்குள் நுழைந்த மெக்சிகோவைச் சேர்ந்த 46 வயது நபர், இரண்டு ஹேர்ஸ்ப்ரே கொள்கலன்களில் போதைப்பொருட்களை மறைத்து வைத்திருந்தார்.

அத்துடன் அவர், ஹேர் ஜெல் டப்பாவிலும், வெட் வைப்ஸ் பேக்கிலும் அதிக கோகைனை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

பின்னர் அந்த நபர் கன்டோனல் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

ஒரு நாள் கழித்து, சூரிச் விமான நிலையத்தில் ஒரு கிலோகிராம் கோகைனுடன் 27 வயது பிரேசில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

அவர் சாவோ பாலோவிலிருந்து சூரிச்சிற்கு பயணம் செய்து, தனது ஆடைகளில் போதைப்பொருட்களை மறைத்து வைத்திருந்தார்.  

கன்டோனல் பொலிசாரால் அவர் கைது செய்யப்பட்டார்.

மூலம்- Bluewin

Related Articles

Latest Articles