பெர்னில் உள்ள Sumiswaldஇல் வெள்ளிக்கிழமை பிற்பகல் 3:30 மணியளவில், சிறு குழந்தை ஒன்றை, ரொட்வீலர் நாய் தாக்கி படுகாயப்படுத்தியுள்ளது.
குழந்தை பலத்த காயமடைந்த நிலையில், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
அங்கிருந்தவர்கள், கடும் பிரயத்தனப்பட்டு குழந்தையை, நாயின் பிடியில் இருந்து மீட்டனர்.
கால்நடை அலுவலகத்துடன் கலந்தாலோசித்த பின்னர், நாய் பறிமுதல் செய்யப்பட்டு கருணைக் கொலை செய்யப்பட்டது.
மூலம்- Bluewin