Vaud கன்டோனில் உள்ள Château-d’Oex இல் சர்வதேச வெப்ப பலூன் திருவிழாவில் இன்று பலூன்கள் பறக்கவிடப்பட்டன.
நேற்று தொடங்கிய இந்த திருவிழாவில், பலூன்களை பறக்க விட முடியாதபடி காற்று பலமாக வீசியது.
அதனால் நேற்று பலூன்கள் பறக்கவிடப்படுவது ரத்துச் செய்யப்பட்டது.
இன்று காலை 11 மணியளவில் முதலாவது பலூன் பறக்கவிடப்பட்டது.
இதையடுத்து ஒரு டசின் வரையான பலூன்கள் வானில் பறக்கவிடப்பட்டன
இதனைக் காண 10 ஆயிரத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனர்.
அவர்களில் 3000 பேர் வெப்ப பலூனில் இருந்தபடியே ரசித்தனர்.
மூலம்- swissinfo