Aesch ZH இல் காருடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சனிக்கிழமை பிற்பகல் சுமார் 3 மணியளவில், இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
Rietstrasse இல், விநியோக வான் ஒன்றுக்குப் பின்னால் சென்று கொண்டிருந்த 26 வயது மோட்டார் சைக்கிள் ஓட்டுநர், அதனை முந்திக் கொண்டு செல்ல முயன்ற போது, எதிரே வந்த கார் மீது நேருக்கு நேர் மோதினார்.
இந்த விபத்தில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
மூலம்-20min.