16.1 C
New York
Tuesday, September 29, 2026

குழந்தையை தாக்கி படுகாயப்படுத்திய ரொட்வீலர் கருணைக் கொலை.

பெர்னில் உள்ள Sumiswaldஇல் வெள்ளிக்கிழமை பிற்பகல் 3:30 மணியளவில்,  சிறு குழந்தை ஒன்றை, ரொட்வீலர் நாய் தாக்கி படுகாயப்படுத்தியுள்ளது.

குழந்தை பலத்த காயமடைந்த நிலையில், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

- Advertisement -

அங்கிருந்தவர்கள், கடும் பிரயத்தனப்பட்டு குழந்தையை, நாயின் பிடியில் இருந்து மீட்டனர்.

கால்நடை அலுவலகத்துடன் கலந்தாலோசித்த பின்னர், நாய் பறிமுதல் செய்யப்பட்டு கருணைக் கொலை செய்யப்பட்டது.

மூலம்- Bluewin

Related Articles

Latest Articles