16.6 C
New York
Thursday, September 11, 2025

சுவிட்சர்லாந்தில் குழந்தைகள் பிறப்பு வீழ்ச்சி.

சுவிட்சர்லாந்தில் குழந்தைகள் பிறப்பு வீதம் வீழ்ச்சியடைந்து வருவது குறித்து கவலை வெளியிடப்பட்டுள்ளது.

2023ஆம் ஆண்டில்,  80,024 குழந்தைகள் பிறந்திருக்கின்றன.

2021ஆம் ஆண்டில் 89,644 குழந்தைகளும், 2022 ஆம் ஆண்டில்  82,371 குழந்தைகளும் பிறந்த நிலையில், 2023இல், குழந்தைகள் பிறப்பு கணிசமாக குறைந்துள்ளது.

2016ஆம் ஆண்டுக்குப் பின்னர் குழந்தைகள் பிறப்பு குறைந்து வந்திருக்கின்ற நிலையில், விதிவிலக்காக, 2021ஆம் ஆண்டில் மாத்திரம், குழந்தைகள் பிறப்பு அதிகரித்திருந்தது.

குழந்தைகள் பிறப்பு குறைந்திருப்பதற்கு வாழ்க்கைச் செலவு அதிகரிப்பினால், கூடுதல் நேர வேலைக்குச் செல்ல வேண்டியிருப்பது, பகல் பராமரிப்பு செலவின அதிகரிப்பு போன்றனவும் காரணமாக முன்வைக்கப்படுகிறது.

சுவிட்சர்லாந்தில் 1000 பெண்களுக்கு 1400 குழந்தைகள் என்ற அடிப்படையிலேயே பிறப்புகள் இடம்பெறுகின்றன.

பிறப்பு குறைந்து வருவது பொருளாதார மற்றும் சமூக ரீதியாக பாதிப்புகளை ஏற்படுத்தும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

மூலம்- 20min.

Related Articles

Latest Articles