வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் கப்பலேந்திய மாதா தேவாலயத்தின் முன்பாக அமைந்துள்ள, சிலுவையில் அறையப்பட்ட இயேசுநாதரின் பாதத்தில் இருந்து நீர் கசிந்துள்ளது.
இன்று காலை மூன்று மணித்தியாலங்களுக்கு மேலாக இயேசுநாதரின் பாதத்தில் இருந்து விரல்கள் வழியாக நீர் கசிவதைக் கண்டு மக்கள் ஆச்சரியமடைந்தனர்.
இதை அறிந்து பல்வேறு இடங்களில் இருந்து வருகை தந்த மக்கள் இயேசுநாதர் காலில் இருந்து வடிந்தோடிய நீரை எடுத்துச் சென்றனர்.