18.2 C
New York
Thursday, September 11, 2025

16 வயது சிறுமி மீது கொடூரத்  தாக்குதல் நடத்தி வீடியோவை வெளியிட்ட சிறுமிகள் குழு.

Solothurn கன்டோனில் உள்ள Oensingen  ரயில் நிலையத்தில் 16 வயது சிறுமி மீது, கொடூரத்  தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஜனவரி 17ம் திகதி  இரவு 8 மணிக்கும்  8.30 மணிக்கும் இடையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

14 முதல் 16 வயதுடைய ஆறு  சிறுமிகளைக் கொண்ட குழுவே, இந்த தாக்குதலை நடத்தியுள்ளது.

சிறுமியை தாக்கி, பலத்த காயப்படுத்தி, கொடூரமாக அவமானப்படுத்தியது.

சிறுமியின் உடலில் ஏற்பட்ட காயங்கள் காரணமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இந்தக் குற்றச் செயலை  வீடியோ எடுத்த சிறுமிகள் குழு அதனை இணையத்தில் பரவ விட்டுள்ளது.

இதையடுத்து, சட்டமா அதிபர் அலுவலகம் குற்றவியல் விசாரணையைத் தொடங்கியுள்ளது.

வீடியோவில்,  வன்முறையின் கொடூரமான காட்சிகளைக் காண முடிகிறது.

தரையில் தூக்கி வீசப்படுகிறார், பலமுறை கைமுட்டிகளாலும், கால்களாலும் உதைக்கப்பட்டு தாக்கப்படுகிறார். அவமானகரமான வார்த்தைகளால் அவமதிக்கப்படுகிறார்.

அதை சிறப்பாகப் படமாக்க அதிக வெளிச்சம் தேவை என ஒரு சிறுமி  கோருகிறாள். இதைப் பார்த்துக் கொண்டிருக்கும் மற்றவர்கள் சிரிக்கிறார்கள். வீடியோவின் முடிவில், ஒருவர், கத்தரிக்கோல் எங்கே? என்று கேட்கிறார். அடுத்து என்ன நடந்தது என்பது தெரியவில்லை.

மற்றொரு வீடியோ பதிவு, ஒரு பெண்ணின் கழுத்து கூர்மையான பொருளால் வெட்டப்பட்டதைக் காட்டுகிறது.

இன்னொரு வீடியோவில், ஒரு காட்டில் ஒரு பெண் ஆடையை கழற்றுமாறு கட்டாயப்படுத்தப்படுகிறார்.

இரண்டு நிகழ்வுகளிலும் ஒரே பாதிக்கப்பட்டவரா என்பதை இன்னும் சரிபார்க்க முடியவில்லை.

சந்தேகநபர்களான சிறுமிகள் 6 பேரும் வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்டவரைப் பாதுகாப்பதற்காக குற்றச் செயல்களின் வீடியோக்களை இனி பகிர வேண்டாம் என்று புலனாய்வாளர்கள் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மூலம்- 20min.

Related Articles

Latest Articles