26.5 C
New York
Thursday, September 11, 2025

டிக் டொக்கில் பரவும் பரசிற்றமோல் சவால் – உயிராபத்தை விளைவிக்கும்.

டிக் டொக்கில் பரவி வரும் பரசிற்றமோல் சவால்  ஆபத்தானது என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

மேற்கு சுவிட்சர்லாந்து கன்டோன்களில் இளையோர் மத்தியில் இந்த சவால் பரவி வருகிறது.

வலி  நிவாரணியான பரசிற்றமோல்  மாத்திரைகளை யார் அதிகளவில் எடுத்துக் கொள்வது என இளைஞர்கள், சவால் விடுவது அதிகரித்துள்ளது.

பரசிற்றமோல்  மாத்திரையை அதிகளவில் எடுத்துக் கொண்டதால் பாதிக்கப்பட்ட பலர் மருத்துவ சிகிச்சையில் இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக Jura, Fribourg மற்றும் Vaud  கன்டோன்களில், இந்த ஆபத்து இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மருத்துவ நிபுணரின் ஆலோசனையில் அதிகபட்சமாக 1000 மில்லி கிராம் பரசிற்றமோல் மாத்திரைகளை மாத்திரமே ஒருவர் எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதிகளவு எடுத்துக் கொண்டால் ஈரல் செயலிழப்பு, உயிர் ஆபத்து என்பன இருப்பதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

மூலம்- swissinfo

Related Articles

Latest Articles