100 ஆண்டுகளுக்குப் பின்னர், 100 பிராங் முகப் பெறுமதி கொண்ட, தங்க நாணயம் வெளியிடப்படவுள்ளது.
புதிய நாணயம் ஜூலை 1 முதல் வரையறுக்கப்பட்ட அளவில் கிடைக்கும்.
1925 இல் 500 நாணயங்கள் மாத்திரம் தயாரிக்கப்பட்ட நிலையில், புதிதாக 2,500 நாணயங்கள் மட்டுமே வெளியிடப்படவுள்ளது.
இவை 3500 பிராங்கிற்கு விற்கப்படும் என Swissmint அறிவித்துள்ளது.
1925 ஆம் ஆண்டைப் போலவே, புதிய தங்கநாணயமும், 900 தங்கக் கலவையால் ஆனது . 35 மிமீ விட்டம் மற்றும் 32.258 கிராம் எடை கொண்டது.
1925ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட 100 பிராங் தங்க நாணயம், சேகரிப்பாளர்கள் மத்தியில் பிரபலமானது என்பதுடன், அது பல ஆயிரம் பிராங் மதிப்பைக் கொண்டுள்ளது.
மூலம்- swissinfo