டாவோஸில் உள்ள செர்டிக் பாஸில் ஒரு மோசமான பனிச்சரிவில் சிக்கி, இரண்டு டச்சு மலையேற்ற வீரர்கள் உயிரிழந்தனர்.
வியாழக்கிழமை பிற்பகல் 1 மணியளவில் 2,739 மீற்றர் உயரத்திற்கு ஏறிக் கொண்டிருந்த போது, பனிச்சரிவு ஏற்பட்டது.
இதில் 31 மற்றும் 35 வயதுடைய இரண்டு பேர் பனிச்சரிவுக்குள் புதைந்து உயிரிழந்தனர்.
ஹெலிகொப்டர்கள் மற்றும் மோட்ட நாய்களுடன் மீட்புக் குழுக்கள் சம்பவ இடத்தில் இருந்தன.
விபத்துக்கான காரணம் குறித்த விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
மூலம் – 20min.