சுவிட்சர்லாந்தில் வீட்டு விநியோக வணிக சங்கிலியான Depot வங்குரோத்து நிலைக்கு சென்றுள்ளது. அதன் 34 கிளைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதுதொடர்பான அறிவிப்பு நேற்று Thurgau கன்டோன் அதிகாரிகளிடம் தாக்கல் செய்யப்பட்டது.
“நிதி நிலைமையை நிலைப்படுத்த பெரும் முயற்சிகள் இருந்த போதிலும், நீண்டகாலத்திற்கு வணிக நடவடிக்கைகளைத் தக்கவைக்க எந்தவொரு சாத்தியமான தீர்வையும் காண முடியவில்லை,” என்று Depot நேற்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பொருளாதார சூழல் மற்றும் பல்வேறு வெளிப்புற காரணிகள் வணிகத்தில் சுமையாக உள்ளன.
மேலும் வங்கிகளுடனான பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்துள்ள.
ஜனவரி மாதத்திற்கான சம்பளம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்று நிறுவனம் சுட்டிக்காட்டுகிறது.
இருப்பினும், கடைகள் எப்போது மூடப்படும் அல்லது எத்தனை ஊழியர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பது குறித்த எந்த விவரங்களையும் நிறுவனம் வழங்கவில்லை.
வரவிருக்கும் வாரங்கள் சம்பந்தப்பட்ட அனைவருடனும் நெருக்கமான ஒத்துழைப்புடன் அடுத்த கட்ட நடவடிக்கைகளைத் திட்டமிடுவதற்கு அர்ப்பணிக்கப்படும் என்று மட்டுமே Depot கூறியது.
நிலுவையில் உள்ள கொள்வனவு ஓடர்கள் அல்லது பரிசு வவுச்சர்களைக் கொண்ட வாடிக்கையாளர்கள் வாடிக்கையாளர் சேவையைத் தொடர்பு கொள்ள அழைக்கப்படுகிறார்கள்.
கடைகள் வெள்ளிக்கிழமை மூடப்படும் என்றும், இதனால் சுமார் 300 ஊழியர்கள் வேலையிலிருந்து வெளியேறுகிறார்கள் என்றும் சில ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மூலம்- swissinfo