சீனாவின் AI செயலியான Deepseek யினால் ஏற்படக் கூடிய தரவுப் பாதுகாப்பு கரிசனைகள் குறித்து சுவிட்சர்லாந்து உன்னிப்பாக கவனித்து வருகிறது.
தரவு தனியுரிமைக் கவலைகள் காரணமாக சீன AI செயலியான Deepseek இத்தாலியில் தடை செய்யப்பட்டுள்ளது.
சுவிஸ் அதிகாரிகளும் இந்த செயலியை உன்னிப்பாகக் கண்காணித்து, சாத்தியமான தரவுப் பாதுகாப்பு சிக்கல்களை ஆராய்ந்து வருகின்றனர்.
Deepseek உலகளவில் மில்லியன் கணக்கான பதிவிறக்கங்களைக் கொண்டுள்ளது.
சுவிட்சர்லாந்தில், தடை விதிக்கப்படவில்லை. எனினும், பயனர்கள் தாங்கள் பயன்படுத்தும் செயலிகளுக்குப் பொறுப்பேற்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்- 20min