Wangen bei Olten இல் உள்ள மசூதி மீது அடையாளம் தெரியாத நபர்கள் பட்டாசுகள் மற்றும் கற்களால் தாக்கியுள்ளனர்.
சனிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் மசூதியில் அடையாளம் தெரியாத நபர்கள் பட்டாசு வெடித்தனர்.
அவர்கள் கற்களால் ஜன்னலைத் தாக்கி சேதப்படுத்தியதாக Solothurn கன்டோனல் பொலிசார் தெரிவித்தனர்.
முதற்கட்ட விசாரணையில் குற்றவாளிகள் இளைஞர்கள் என்று தெரியவந்துள்ளது.
பொலிசார் வருவதற்கு முன்பே அவர்கள் கண்டுபிடிக்கப்படாமல் தப்பி ஓடிவிட்டனர்.
Solothurn கன்டோனல் பொலிசார் விசாரணையைத் தொடங்கி, பொறுப்பானவர்களை அடையாளம் காண தடயங்களைத் தேடி வருகின்றனர்.
மூலம்- bluewin