சூரிச் நகரில் Winterthurerstrasse/Bülachstrasse சந்திப்புக்கு அருகே கார் ஒன்று, கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
நேற்று அதிகாலை 3 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
23 வயது இத்தாலியர் ஒருவர் ஓடிச் சென்ற காரே விபத்துக்குள்ளாகி குப்புறக் கவிழ்ந்தது.
இந்தச் சம்பவத்தில் ஓட்டுநர் மற்றும் 21 வயது மற்றும் 22 வயது இத்தாலிய பெண் ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.
அவர்கள் சூரிச் பாதுகாப்பு மற்றும் மீட்பு துணை மருத்துவர்களால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
மூலம்- 20min