Bülach இல் வெறுமையாக கிடந்த வீட்டை தீவைத்துக் கொளுத்தியதாக 4 சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஜனவரி 10ஆம் திகதி இந்தச் சம்பவம் இடம்பெற்றது.
சுமார் 1 இலட்சம் ரூபா சேதம் ஏற்பட்ட தீவிபத்து தொடர்பாக விசாரணை நடத்திய சூரிச் பொலிசார், இது ஒரு நாசவேலை என்பதை கண்டுபிடித்தனர்.
இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணைகளில், 13 வயதுடைய இரண்டு சிறுவர்களும், 14 வயதுடைய 2 சிறுவர்களுமாக 4 சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சிறுவர்களில் இருவர் சுவிஸ் நாட்டவர்கள் என்றும் ஒருவர் ஜெர்மனியர் என்றும் மற்றொருவர் இத்தாலியர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்- 20min.