A15 நெடுஞ்சாலையில் சனிக்கிழமை மதியம் இடம்பெற்ற விபத்தில், படுகாயம் அடைந்த ஒருவர் திங்கட்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சென்.கலன் கன்டோனல் பொலிசார் இதனை தெரிவித்துள்ளனர்.
62 வயதுடைய அந்த நபர் மோட்டார் சைக்கிளில் ஹின்வில்லில் இருந்து ரீச்சன்பர்க் நோக்கி A15 நெடுஞ்சாலையில், சென்று கொண்டிருந்தார்.
அவர் ராப்பர்ஸ்வில் வெளியேறும் இடத்தில் மோட்டார் பாதையை விட்டு வெளியேற முயன்ற போது, அவரது ஸ்கூட்டர் வீதியை விட்டு விலகி புல்வெளியில் விழுந்தது.
62 வயதான அவர் விழுந்ததில் பலத்த காயமடைந்தார்.
ஆரம்ப மருத்துவ சிகிச்சை பெற்ற பிறகு, அவர் ஹெலிகொப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அவரது விபத்துக்கான காரணம் மருத்துவப் பிரச்சினையாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
மூலம்- 20min.

