மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் பெற்றோர், அருகில் இருந்து கவனித்துக் கொள்வதற்கு ஏற்றவாறு, மருத்துவமனைக்கு அருகிலேயே பெற்றோர்களுக்கான தற்காலிக வசிப்பிடங்கள் ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளன.
தீவிரமாக நோய்வாய்ப்பட்ட குழந்தைகளின் பெற்றோருக்கு ரொனால்ட் மெக்டொனால்ட் ஹவுஸ் இந்த வசதியை வழங்கவுள்ளது.
புதிய பல்கலைக்கழக குழந்தைகள் மருத்துவமனை சூரிச் (கிஸ்பி) க்கு அருகாமையில் இந்த பெற்றோர் இல்லம் கட்டப்படுகிறது.
2026ஆம் ஆண்டு கோடை காலத்தில் இருந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோருக்கு அவர்களின் குழந்தைகளுக்கு அருகில் இந்த தற்காலிக இல்லம் வழங்கப்படும்.
சூரிச்சின் குழந்தைகள் மருத்துவமனையின் எலியோனோர் அறக்கட்டளை, சுவிஸ் கால்-கை வலிப்பு அறக்கட்டளை (EPI) மற்றும் ரொனால்ட் மெக்டொனால்ட் குழந்தைகள் அறக்கட்டளை ஆகியவற்றால் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
புதிய பெற்றோர் இல்லம் முதன்மையாக தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் புதிதாக பிறந்த குழந்தைகள் விடுதியில் சேர்க்கப்படும் குழந்தைகளின் பெற்றோருக்கு இடத்தை வழங்குகிறது.
மூலம்- 20min