Sevelen SG அருகே உள்ள Rheintal Ost rest நிறுத்தத்தில் ஒரு ஏடிஎம் இயந்திரம் வெடித்துச் சிதறியுள்ளது.
திங்கட்கிழமை இரவு அடையாளம் தெரியாத குற்றவாளிகள் தனியாக இருந்த ஏடிஎம்மை வெடிக்கச் செய்து பெரும் சேதத்தை ஏற்படுத்தினர் என பொலிசார் தெரிவித்தனர்.
ஆயிரக்கணக்கான பிராங்குகள் சேதம் ஏற்பட்டுள்ளது.
ஏடிஎம் இயந்திரம் வெடிபொருட்களைப் பயன்படுத்தி வெடிக்கச் செய்யப்பட்டது.
இதன் பின்னர் குற்றவாளிகள் ஏ13 மோட்டார் பாதையில் திருடப்பட்ட காரில் தப்பிச் சென்றனர்.
குற்றவாளிகள் ஏடிஎம்மில் இருந்து பணத்தைத் திருடினரா என்பது குறித்து தற்போது விசாரிக்கப்படுகிறது.
குற்றவாளிகள் நெடுஞ்சாலையில் காரை நிறுத்தி விட்டு, வனவிலங்கு வேலியைத் தாண்டி அருகிலுள்ள காட்டுக்குள் தப்பிச் சென்றனர்.
அங்கு, கூடுதல் ட்ரோன்கள் மற்றும் ஒரு பொலிஸ் நாய் நிறுத்தப்பட்டிருந்த போதிலும் குற்றவாளிகள் தப்பிச் சென்றனர்.
மூலம் – 20min.