15.8 C
New York
Thursday, September 11, 2025

பெர்ன் விமான விபத்து – மேலதிக தகவல்கள் வெளியாகின.

பெர்னில் நேற்று தனியார் விமானம் விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் காயமடைந்தனர் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Leuzigen நகராட்சியில் நேற்றுக்காலை 11.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றது.

ஐந்து இருக்கைகள் கொண்ட டர்போபிராப் விமானம் Grenchen விமான தளத்திற்கு அருகிலுள்ள ஒரு வயலில் மோதி தரையிறங்கியது.

விபத்துக்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

அதில் இருந்த இரண்டு பெண்கள் மற்றும் ஒரு ஆண் என மூன்று பேரும் மீட்கப்பட்டனர்.

அவர்களில் இருவர் அம்புலன்ஸ்கள் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

ஒருவர் விமான மீட்பு சேவையான ரேகாவால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

சுவிஸ் உரிமத் தகடுகளைக் கொண்ட விமானம் Locarno வில் இருந்து Grenchen நோக்கிப் பயணம் மேற்கொண்டது.

இந்த விபத்து குறித்து சுவிட்சர்லாந்தின் சட்டமா அதிபர் அலுவலகத்தின் வழிகாட்டுதலின் கீழ் சுவிஸ் போக்குவரத்து பாதுகாப்பு புலனாய்வு சபையுடன் ஒருங்கிணைந்து பெர்ன் கன்டோனல் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூலம் -20min.

Related Articles

Latest Articles