Vaud கன்டோனில் உள்ள Grandsonஇல், ஹொட்டேலில் ஏற்பட்ட தீவிபத்தை அடுத்து ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
புதன்கிழமை இரவு 8.25 மணியளவில் ஹொட்டேலின் அறை ஒன்றில் தீவிபத்து ஏற்பட்டது.
இதையடுத்து தீயணைப்பு பிரிவினர் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
அங்கிருந்து ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ள நிலையில் அவரை அடையாளம் காணும் பணிகள் மேற்கொள்ளப்படுவதாக பொலிசார் தெரிவித்தனர்.
இந்த தீவிபத்துக்கான காரணம் தெரியவராத நிலையில், அங்கிருந்த ஏனைய விருந்தினர்கள், வேறு ஹொட்டேல்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
மூலம் -20min.