பெர்னில், Leuzigenஇல் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியதில், பலர் காயமடைந்துள்ளதாக பெர்ன் கன்டோனல் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
Grenchen விமான ஓடுதளம் அருகே இன்று பிற்பகல் இடம்பெற்ற இந்த விபத்தை அடுத்து பொலிசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
விமானத்தின் அளவு உட்பட மேலதிக விவரங்களை நேரத்தில் பொலிசாரால் வழங்க முடியவில்லை.
அந்தப் பகுதியில் மீட்பு ஹெலிகொப்டர், அம்புலன்ஸகள், பொலிஸ் வாகனங்கள் காணப்படுகின்றன.
அதேவேளை பிளைட் ராடர் தகவல்களின் படி 5 ஆசனங்களைக் கொண்ட Socata TBM-700C ரக விமானம், Locarno விமான நிலையத்தில் இருந்து Grenchen விமான நிலையம் நோக்கிப் புறப்பட்டுள்ளது.
இது ஒற்றைய இயந்திரம் கொண்ட ஒரு தனியார் ஜெட் விமானம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்- 20min.