20.1 C
New York
Wednesday, September 10, 2025

USAID நிறுவனத்தை மூடும் ட்ரம்பின் உத்தரவுக்கு நீதிமன்றம் தடை.

USAID ஊழியர்கள் 2,200  பேரை கட்டாயமாக பணியில் இருந்து நீக்கும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் உத்தரவிற்கு அமெரிக்க நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

ட்ரம்ப் நிர்வாகம் வெள்ளிக்கிழமை இரவு 11.59 மணியுடன் USAID ஊழியர்களை பணியில் இருந்து நீக்கி விட்டு, அந்த அமைப்பை மூடுவதற்குத் திட்டமிட்டிருந்த நிலையில் இறுதி நேரத்தில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது,

USAID இன் இருப்பு சட்டத்தில் பொறிக்கப்பட்டுள்ளது என்றும் அதனால், இந்த நிறுவனத்தை மூடுகின்ற முடிவுக்கு இடைக்கால தடைவிதிப்பதாகவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

USAID அமைப்பின் இரண்டு ஊழியர் பிரதிநிதிகள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர்.

ட்ரம்பின் நிர்வாகத்திற்கு ஊழியர்களை பணிநீக்கம் செய்ய அதிகாரம் இல்லை என்று அவர்கள் வாதிடுகின்றனர்.

சட்டப் பிரச்சினை தொடரும் வரை, தனது தற்காலிக தடை உத்தரவு தொடரும் என்று நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Latest Articles