உள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவதற்கு எதிராக சூரிச் நகர வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர்.
இந்தத் திட்டத்திற்கு எதிராக 53.2% வாக்களித்ததைத் தொடர்ந்து, உள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர்களால் ஊதிய உயர்வு பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
சூரிச்சில் மொத்தம் 45,350 பேர் சம்பள உயர்வுக்கு எதிராக வாக்களித்தனர். 39,881 பேர் ஆதரவாக வாக்களித்தனர்.
36.7 வீதமான வாக்காளர்கள் இந்த வாக்கெடுப்பில் பங்கேற்றனர்.
புதிய இழப்பீட்டு அவசரச் சட்டத்தின் மூலம், உள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் சம்பளத்தை ஆண்டுக்கு சராசரியாக 16,000 பிராங்கில் இருந்து 28,000 பிராங்குகளாக அதிகரிக்க விரும்பினர்.
புதிய அவசரச் சட்டம், 125 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் மாதாந்த செலவுப் படியை 260 பிராங்கில் இருந்து, 1,000 பிராங்குகள், வரை அதிகரிக்கவும், அவர்கள் கலந்து கொள்ளும் கவுன்சில் கூட்டத்தின் ஒவ்வொரு நிமிடத்திற்கும் 1.20 பிராங் இழப்பீடு வழங்கவும் முன்மொழிந்திருந்தது.
மூலம்- swissinfo

