-0.2 C
New York
Tuesday, December 30, 2025

குறைந்தபட்ச ஊதியத்தை அறிமுகப்படுத்தும் முயற்சி இரண்டு கன்டோன்களில் தோல்வி.

குறைந்தபட்ச ஊதியத்தை அறிமுகப்படுத்தும் திட்டத்தை, Basel Country கன்டோன் வாக்காளர்கள், நிராகரித்துள்ளனர்.

இந்த கன்டோனில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் ஒரு மணி நேரத்திற்கு 22 பிராங் குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும் என்று யூனியா தொழிற்சங்க முன்முயற்சி,  கோரியது.

Basel Country வாக்காளர்கள் இந்த திட்டத்தை நிராகரித்தனர்.

இந்த திட்டத்திற்கு ஆதரவாக 33,434 வாக்குகளும், எதிராக 35,426 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

இந்த வாக்கெடுப்பில் 36.7% வாக்காளர்கள் மட்டும் வாக்களித்தனர்.

குறைந்தபட்ச ஊதிய முயற்சியை இடதுசாரி சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் பசுமைக் கட்சி ஆதரித்தன.

அதே நேரத்தில் மற்ற கட்சிகளும் அரசாங்கமும் அதை நிராகரிக்க பரிந்துரைத்தன.

அதேவேளை, அண்டை மாகாணமான Solothurn கன்டோனில்  உள்ள வாக்காளர்களும் நேற்று 23 பிராங் குறைந்தபட்ச ஊதியத்தை அறிமுகப்படுத்தும் திட்டத்தை நிராகரித்தனர்.

இதற்கு எதிராக 58% பேர் வாக்களித்தனர்.

நாட்டின் பிற பகுதிகளில், ஜெனீவா, நியூசாடெல், டிசினோ மற்றும் ஜூரா மாகாணங்கள் குறைந்தபட்ச ஊதியத்தை அறிமுகப்படுத்தியுள்ளன.

எனினும், சட்டப்பூர்வ குறைந்தபட்ச ஊதியத்தைக் கொண்ட ஒரே ஜெர்மன் மொழி பேசும் கன்டோனாக பாசல் Basel City மாத்திரமே உள்ளது.

மூலம்- swissinfo

Related Articles

Latest Articles