பொலிஸ் சோதனைச்சாவடியில் நிறுத்தாமல் தப்பிச் சென்ற வாகனச் சாரதி ஒருவரை, குடியிருப்பு பகுதிக்குள் பொலிஸ் மோப்பநாய் கண்டுபிடித்துள்ளது.
Nidwalden பகுதியில் ஞாயிறு அதிகாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றது.
Nidwalden கன்டோனல் பொலிசார் நகருக்கு வெளியே, சோதனையை மேற்கொண்டிருந்த போது, கறுப்புநிற சிறிய கார் ஒன்று வந்து விட்டு பொலிசாரைக் கண்டதும் திரும்பிச் சென்றது.
காரை நிறுத்துமாறு பொலிசார் சமிக்ஞை காட்டிய போதும் அதுது வேகமாக சென்று மறைந்தது.
பொலிசார் துரத்திச் சென்ற போது, காரை விட்டு விட்டு,சாரதி குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து தலைமறைவானார்.
பொலிஸ் மோப்பநாயான ருஷ்டி அங்கு வரவழைக்கப்பட்டு நடத்தப்பட்ட தேடுதலில், தப்பியோடி தலைமறைவாகிய சாரதி கைது செய்யப்பட்டார்.
அவர் போதைப் பொருளைப் பயன்படுத்தியிருந்தமை உறுதி செய்யப்பட்டது.
அத்துடன் அவர் வாகன அனுமதிப்பத்திரம் இல்லாமல் கார் ஓட்டியிருந்தார்.
கொசோவோ நாட்டவரான அவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
மூலம்- 20min.

